எங்களிடம் ஒன்றும் இல்லை எனச் சொல்லாதே!!

113

சிறந்த கனடிய இலக்கியத்துக்கு வழங்கப்படும் அதி உயர் பரிசான ஜில்லர் பரிசு இந்த ஆண்டு மடலின் தியென் எனும் நாவலாசிரியருக்கு வழங்கப்பட்டுள்ளது. Do Not Say WE have Nothing( எங்களிடம் ஒன்றும் இல்லை எனச் சொல்லாதே)  எனும் நாவலுக்கே இந்தப் பரிசும் ஒரு லட்சம் டொலர் பணமும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. வான்கூவரில் பிறந்து மொன்றியாலில் வளர்ந்த மடலின் தியென் ஏற்கெனவே மூன்று நூல்கள் வெளியிட்டுள்ளார். அவை நல்ல வரவேற்பைப் பெற்ற நூல்களாகும்.

ஜில்லர் பரிசு பெற்ற நாவலின் களம் மா ஓ வின் கலாசாரப் புரட்சி நடந்த காலச் சீனாவையும் அதற்குப் பிற்பாடு தியென் அன் மென் சதுக்கத்தில் நிகழ்ந்த இளைஞர்/மாணவர் எழுச்சி பற்றியும் இசைக் கலைஞர்களின் பார்வையூடாகப் பேசுகிறது. கனடிய இலக்கியம் என்பது கனடாவில் நிகழ்வனவற்றைப் பற்றியது மட்டுமே அல்ல என்பதை ஜில்லர் பரிசு மறுபடியும் உறுதி செய்துள்ளது!.