டிசம்பர் 3, 4ந் திகதிகளில் ஐஸ்கிரீம் திரைப்படம் வெளியாகிறது.

265

னடாவின் தமிழ்த் திரையுலகில் குறிப்பிடத்தக்க பெயராக அறியப்படும் ரவி அச்சுதன் அவர்களின் இயக்கத்தில் கனடாவில் எடுக்கப்பட்ட ‘ஐ-Scream’ என்ற முழு நீளத் திரைப்படம் திரையரங்க வெளியீட்டுக்குத் தயாராக உள்ளது. அது குறித்த ஊடகவியலாளர் சந்திப்பு நவம்பர் மாதம் 5ந் திகதி நடைபெற்றது.

சந்திப்பின்போது திரைப்படத்தின் ட்ரெய்லரும், திரைப்படத்தில் பங்கேற்ற கலைஞர்களும்  அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டனர். அத்துடன் திரைப்படத்தின் போஸ்டர்களும்,  ஏனைய விளம்பரங்களும்,  திரைப்படம் குறித்த மற்றைய பல விபரங்களும் வெளிக்காட்டப்பட்டன. திகில் கலந்த ஜனரஞ்சக திரைப்படமாக ‘ஐ-Scream’ உருவாக்கப்பட்டுள்ளது எனத் தெரிய வருகிறது. இந்தியத்  திரைப்பட ரசிகர்களுக்கும், தமிழகத் தொலைக்காட்சிகளுக்கும் ஏற்ற விதமாக கனடா தமிழ்த் திரைப்படைப்புக்களை கொண்டு செல்வதற்கேற்ற முன்மாதிரித் தயாரிப்பாக ‘ஐ-Scream’ திரையில் இருக்கும் எனவும் அறியப்படுகிறது.  டிசம்பர் 3, 4ந் திகதிகளில்  ‘ஐ-Scream’ திரைப்படம் திரையிடப்படுகிறது.