யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டங்கள் தற்காலிகமாக கைவிடப்பட்டன!

96

ண்மையில் யாழ்.கொக்குவில்-குளப்பிட்டிப் பகுதியில் வைத்து யாழ்.பல்கலைக்கழகமாணவர்கள் இருவர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டினால் படுகொலையடைந்ததை எதிர்த்து,யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்ச்சியாக மேற்கொண்டு வந்த போராட்டங்கள் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளன. “ஜனாதிபதி வழங்கிய உறுதி மொழியை அடுத்து கற்றல்செயற்பாடுகளில் ஈடுபடவுள்ளோம்” என யாழ்.பல்கலைக்கழக பீடங்களின் மாணவர்ஒன்றியம் அறிவித்திருக்கிறது.

அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் மாணவர்களுக்கு வழங்கிய உறுதி மொழியை அடுத்துமாணவர்கள் போராட்டத்தை கைவிட்டதாக முதலில் தகவல்கள் வெளியானது.  எனினும்,கடந்த புதன்கிழமை (நவம்பர், 02) யாழ்.பல்கலைக்கழக சமூகம், ஜனாதிபதி மற்றும் பிரதமர்ஆகியோருடன் கொழும்பில் ஜனாதிபதி அலுவலகத்தில் நடாத்திய பேச்சு வார்த்தையைஅடுத்தே மாணவர்கள் போராட்டத்தினை கைவிட்டுள்ளதாகத் தெரிவித்திருக்கின்றனர்.

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இருவர், பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டினால் படுகொலையடைந்ததையடுத்து, மாணவர் இருவரினதும் படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தும் யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள்காலவரையற்ற வகுப்பு பகிஷ்கரிப்பு போராட்டத்தை மேற்கொண்டிருந்ததுடன், யாழ்செயலகமுற்றுகைப் போராட்டத்தையும் மேற்கொண்டிருந்தனர். கடந்த திங்கட்கிழமை (ஒக்டோபர்,31)யாழ்.பல்கலைக்கழக நிர்வாகத்தை முடக்கும் போராட்டத்திலும் ஈடுபட்டனர். மாணவர்கள் யாழ்.பல்கலைக்கழக பிரதான நுழைவாயிலை மூடி நிர்வாகப் போராட்டத்தில் ஈடுபட்டதனால்,பல்கலைக்கழக நிர்வாகமும் முடக்கப்பட்டது.

எனினும் பின்னர், மாணவர்கள் யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தரையும் பீடாதிபதிகளையும் மூதவையினரையும் பல்கலைக்கழகத்திற்குள் செல்ல அனுமதித்தனர்.அதனைத் தொடர்ந்து பல்கலைக்கழகத்திற்கு வந்த அமைச்சர் டி.எம்.சுவாமி நாதனையும் பல்கலைக்கழகத்திற்குள் செல்ல மாணவர்கள் அனுமதித்தனர். ஏற்கனவே ஒழுங்குசெய்யப்பட்ட கலந்துரையாடலை நடாத்தவே இவர்களை உள்ளே செல்ல அனுமதித்ததாகஅறிய முடிகிறது.
பின்னர், பல்கலைக்கழக நிலைமைகள் தொடர்பான கலந்துரையாடல் நடைபெற்றது. இக்கலந்துரையாடலுக்கு ஊடகவியலளார்கள் செய்தி சேகரிக்க அனுமதிக்கப்படவில்லை.செய்திகளைச் சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களை “எங்களிடம் கேட்டுச் செய்தி எழுதங்கள்”, எமக்கு மீடியா தேவையில்லை எனக் கூறி மாணவர்கள் உள்ளே செல்லவிடாது தடுத்து நிறுத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனால், கலந்துரையடலில் பேசப்பட்ட விடயங்கள், மேற்கொள்ளபட்ட முடிவுகள் குறித்து செய்திகளை ஊடகவியலாளர்களால் சேகரிக்க முடியாத நிலை காணப்பட்டது. எனினும் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் மாணவர்களுக்கு வழங்கிய உறுதி மொழியை அடுத்து மாணவர்கள் போராட்டங்களைகைவிட்டுள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் யாழ.பல்கலைக்கழக சமூகம், ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருடன்நடாத்திய பேச்சு வார்த்தை நடாத்தியிருந்தது. இப் பேச்சு வார்த்தை தொடர்பில் நடாத்தப்பட்டதெளிவு படுத்தும் சந்திப்பில் கருத்து வெளியிட்டுள்ள கலைப்பகுதி மாணவர் ஒன்றியத்தலைவர் ரஜீவன், ஜனாதிபதி நீதியான விசாரணைகளை முன்னெடுத்து, அது தொடர்பான உண்மைத் தன்மையை ஒரு மாத காலத்திற்குள் தெளிவு படுத்துவதாக உறுதியளித்தன் அடிப்படையில் போராட்டத்தை தற்காலிகமாக இடை நிறுத்தி, பல்கலைக்கழக கற்றல்செயற்பாடுகளில் தொடர்ந்து ஈடுபடவுள்ளோம் எனத் தெரிவித்திருக்கிறார்.

மேலும், நாம் பிரச்சினை தொடர்பாக முன்வைத்த எந்தக் கோரிக்கைகளையும் ஜனாதிபதிஎதிர்க்கவில்லை எனவும் குறித்த சம்பவத்திற்கு நீதியான விசாரணை  கிடைக்கும் வரைஅதற்கான போராட்டங்களை தொடர்ந்து நடத்திக் கொண்டிருப்பதுடன், ஒரு மாத காலத்தின்பின்னர் ஜனாதிபதி கூறியபடி செயற்படவில்லையாயின் எமது போராட்டம் தொடர்ச்சியாக மீண்டும் முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவித்திருக்கிறார்.

தாங்கள் முன்வைத்த கோரிக்கைகளுக்கு எதிர்ப்பையும் மாற்றுக் கருத்தையும் முன்வைக்காது,குறித்த படுகொலைச் சம்பவத்திற்கு நீதியான விசாரணைகளை விரைவாக முன்னெடுக்கவும்,பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஒரு கோடி ரூபா நஷ்ட ஈடு வழங்கவும், சட்டம் – ஒழுங்குஅமைச்சர் உண்மையான நிலைப்பாட்டை முன்வைக்கவும் ஜனாதிபதியும் பிரதமரும் சம்மதம்தெரிவித்திருப்பதாக மாணவர் தலைவர்கள் தெரிவித்திருக்கிறார். இதேவேளை, யாழ்.பல்கலைக்கழக மாணவர் இருவரினதும் படுகொலை தொடர்பான வழக்குகடந்த வெள்ளி (04.11.2016) யாழ்.நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது வெளியிடப்பட்ட மரண விசாரண அறிக்கையில், “மோட்டார்சைக்கிளை செலுத்தி வந்த வஜயகுமார் சுலக்ஷன் துப்பாக்கிச் சூட்டினால் மரணமடைந்திருந்தநிலையில் அதன் பின்னர் ஏற்பட்ட மோட்டார் சைக்கிள் விபத்தினால் நடாராஜா கஜன்மரணமடைந்திருந்தார்” எனத் தெரிவிக்கப்பட்டது.

இவ்வழக்கின் விசாரணை எதிர்வரும் 18 ஆம் திகதி மீண்டும் எடுக்கப்படவுள்ளது.