விண்ணப்பித்தார் நிமால் விநாயகமூர்த்தி!

138

மார்க்கம்-தோன்ஹில் தொகுதியில் பற்றிக் பிரவுணின் கொச்சவேடிவ் கட்சியில் போட்டியிட முனைந்துள்ள நிமால் வினாயக மூர்த்தி 2.11.2016 அன்று தன்  நியமனம் கோரும் பத்திரங்களை உத்தியோகபூர்வமாக கட்சி அலுவலகத்தில் சமர்ப்பித்தார். இதன்மூலம் மார்க்கம் தோன்ஹில் தொகுதியிலிருந்து 2018 ஒன்ராறியோ மாநில தேர்தலுக்காக கொன்சவேடிவ் கட்சி சார்பில் நியமனம் கோரி விண்ணப்பித்த முதல் அபேட்சகராகிறார். உத்தியோகபூர்வ சமர்ப்பின்பின் அவரது பிரச்சார அலுவலகத்தில் ஊடகவியலாளருக்கான சந்திப்பு ஒன்றும் நடந்தது. சந்திப்பில்  பேராசிரியர் ஜோசப் சந்திரகாந்தன் திரு. நிமால் விநாயகமூர்த்தி அவர்களைப் பற்றிய தன் கருத்துக்களை முன்வைத்து அறிமுகம் செய்து சிறப்புரையாற்றினார். “நிமால் விநாயகமூர்த்தி பத்து வருடங்களுக்கு மேலாக ஒரே கட்சியில் தொடர்ச்சியாக ஒரு தன்னார்வத் தொண்டனாகவும்,  அங்கத்தவராகவும், இன்று மத்திய குழுவின் நிதிப்  பொறுப்பாளரில்  ஒருவராகவும் பணி செய்து  வரும் ஆர்வம் மிக்க இளைஞர்”  என்று பேராசிரியர் ஜோசப் சந்திரகாந்தன் அறிமுகம் செய்து  வைத்துப் பேசியபோது  எடுத்துக்கூறினார்.

அதன்பின் பேசிய நிமால் வினாயகமூர்த்தி மார்க்கம் தோன்ஹில் தொகுதியில் போட்டியிட வேண்டி வந்த காரணங்களை நன்கு விளக்கி உரையாற்றினார். நிமாலின் அரசியல் பிரவேசத்தை வரவேற்று Carleton- Mississippi Mills சட்டமன்ற உறுப்பினர் Jack Maclaren பேசினார்.   மேலும் நிமால் வினாயமூர்த்தி பிறந்த ஊரான நவக்கிரியைச் சேர்ந்த சிவா பொன்னம்பலம் நவக்கிரி ஊர்மக்கள் சார்பிலும்,Golobal Village Foundation கனடிய பிராந்திய அதிபர் Dr.Filip Krauze  அவர்கள் நிமால் வினாயகமூர்த்தி மனித உரிமைகளுக்காக ஆற்றி வரும் செயல்பாடுகள் குறித்தும், கனடிய தமிழர் பேரவை பேச்சாளர் டேவிட் பூபாலபிள்ளை நிமால் வினாயகமூர்த்தியின் அரசியல் பிரவேசம் குறித்தும், சட்டத்தரணி திரு நாதன் ஸ்ரீதரன் நிமாலின் அரசியல் வெற்றி பெறவேண்டும் என்பது குறித்தும், ஊடவியலாளர் வீரகேசரிமூர்த்தி நிமாலுக்கு ஆதரவு தெரிவித்தும் பேசினர். நிகழ்ச்சியை கொன்சவேடிவ் கட்சி சார்பில் ஸ்காபரோ கில்வூட் தொகுதியில் போட்டியிட்ட திரு கென் கிருபா அவர்கள் தொகுத்து வழங்கியிருந்தார்.