தமிழக முதலைமைச்சர் செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்களின் மறைவு குறித்து கனடியத் தமிழர் பேரவையின் இரங்கல் அறிக்கை

196

தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்களின் மறைவினால் கனடியத் தமிழர் பேரவையும், கனடியத் தமிழர்களும் பெரும் அதிர்ச்சிக்கும், சொல்லொணாத் துயரத்திற்கும் ஆளாகியுள்ளோம்.

ஆளுமை மிகுந்த தலைவரான செல்வி ஜெயலலிதா அவர்கள் தமிழக மக்களுக்கு மட்டுமல்ல, உலகத் தமிழ்மக்களுக்கே ஒரு காப்பரணாகத் திகழ்ந்தவர். அன்னாரின் மறைவு தமிழக அரசியலோடு சேர்த்து, இந்தியத் தேசிய அரசியலிலும் ஒரு பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

‌‌‌ஈழத்தமிழர்கள்மீது அவர் வைத்திருந்த பாசத்தையும், நேசத்தையும் நாம் நன்கு அறிவோம். கடந்த சில வருடங்களில் தமிழக  சட்டசபையினூடாக  ஈழத்தமிழரின் விடிவுக்காக அவர் எடுத்த பல துணிச்சலான நடவடிக்கைகளை நாம் இந்த நேரத்தில் நன்றியுடன் நினைவுகூரக் கடமைப்பட்டுள்ளோம்.

டாக்டர் ஜெ. ஜெயலலிதா அம்மையார் அவர்களின் இழப்பு தந்திருக்கும் ஆழ்ந்த துயரத்தை தமிழ்நாடு, இந்திய, உலகத் தமிழ் மக்களுடன் இணைந்து கனடா வாழ் தமிழர்களாகிய நாமும் பகிர்ந்து கொள்ளுகிறோம்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கின்றோம்.

ஆழ்ந்த துயருடன்,
கனடியத் தமிழர் பேரவை
டொரன்டோ, கனடா