வெள்ளி விழா காணும் வவுனியா வளாகம்

238

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம் வெள்ளி விழா காண்கிறது எனும் மகிழ்வான செய்தியுடன் அதன் தோற்றம் வளர்ச்சி தொடர்பான ஒரு பதிவாக இக் கட்டுரை அமைகின்றது.

தோற்றம் பெற்றதிலிருந்து இன்று வரை இந்த 25 ஆண்டு காலப் பகுதியில் பல ஆயிரம் மாணவர்கள் கல்வி கற்று பட்டதாரிகளாக வெளியேறி உலகின் பலபாகங்களிலும் சேவையாற்றி வருகின்றனர். அப்படி வெளியேறியவர்கள்கள் பலருக்கோ பொது மக்களில் பலருக்கோ வளாகத்தின் தோற்றம், அது வளாகமாக்கப்படுவதில் இருந்த சிக்கல்கள், அதற்காக மேற்கொள்ளப்பட்ட போராட்டங்கள் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இங்கே இந்தப் பதிவு வளாகம் கடந்து வந்த பாதையின் ஒரு இரைமீட்டாலாக அமைகின்றது.

தற்போது ‹வவுனியா வளாகம்› எனப் பெயர் பெற்றுள்ள இந்நிறுவனமானது ஆரம்பத்தில் வட மாகாண இணைக்கப்பட்ட பல்கலைக்கழகக் கல்லூரி என்னும் பெயரில் இயங்கிவந்தது. இணைக்கப்பட்ட பல்கலைக்கழகக் கல்லூரிகள் 1991 ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியில் ஒவ்வொரு மாகாணத்திலும் நிறுவப்படும் திட்டத்துடன் உருவாக்கப்பட்டன. ஒரு வகையில் தொழில்நுட்பத்துறை சார்ந்த கல்வித்துறையே இந்நிறு வனங்கள் வழங்க வேண்டும் என்பதே அடிப்படை நோக்கமாக இருந்தது. எனினும், கொள்கையளவில் இக்கருத்து இருந்ததே தவிர பல்கலைக்கழகக் கல்லூரிகளில் இவை முழுமையாக நடைமுறைக்குக் கொண்டு வரப்படவில்லை. அநேகமான பல்கலைக்கழகக் கல்லூரிகளில் பாரம்பரிய பல்கலைக்கழகங்களில் இருந்து வந்தது போன்றே கல்வித்துறைகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

உதாரணமாக பௌதிக விஞ்ஞானம், உயிரியல் விஞ்ஞானம், கணித விஞ்ஞானம், கணக்கியலும் நிதியியலும், ஆங்கிலம் போன்ற பாடநெறிகளைக் குறிப்பிடலாம்.1991 /1992 ஆம் கல்வியாண்டிற்கு என அனுமதிக்கப்பட்ட அனைத்துப் பல்கலைக்கழக கல்லூரி மாணவர்களும் இது குறித்து சிந்திக்கத்தலைப்பட்டனர். பாரம்பரிய பல்கலைக்கழகங்களில் 3 அல்லது 4 வருடங்களில் பயின்று வெளியேறும் மாணவர்களுடன் அதேதுறையில் 2 வருடங்களில் பயிலும் நாம் வேலைவாய்ப்பு நோக்கில் போட்டி போட முடியாது என்பதனை உணர்ந்த மாணவர்கள் தமது மற்றும் வருங்கால சந்ததியினர் குறித்து தெளிவான உணர்வுடையவர்களாக இருந்தனர். இதனால், 1992 ஆம் ஆண்டின் இறுதிவாக்கில் ஒவ்வொரு பல்கலைக்கழகக் கல்லூரி மாணவர்களும் மற்ற பல்கலைக்கழகக் கல்லூரி மாணவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி இது விடயம் குறித்து ஆலோசனை செய்யத் தலைப்பட்டனர். ஈற்றில் 1993ஆம் ஆண்டு நடுப்பகுதியில் குளியாப்பிட்டிய பல்கலைக்கழகக் கல்லூரியின் விவசாயப் பிரிவான மாக்கந்துறையில் முதலாவது அனைத்துப் பல்கலைக்கழகக் கல்லூரி மாணவர் ஒன்றியக் கூட்டத்தை நடாத்துவதில் வெற்றிப்பெற்றனர். இக்கூட்டத்தில் பல்கலைக்கழகக் கல்லூரி அமைப்பானது தனது நோக்கத்தை எய்தாது என்பது அனைத்து மாணவர்களினாலும் வலியுறுத்தப்பட்டதுடன் வெள்ளி விழாக் காணும் வவுனியா வளாகம் பல்கலைக்கழகக் கல்லூரிகளை பல்கலைக்கழக தரத்துக்கு உயர்த்த வேண்டும் எனும் தீர்மானம் எடுக்கப்பட்டது.

இத்தீர்மானம் நிறைவேறும்வரை சாத்தியமான வழிகளில் அதற்கான அழுத்தங்களையும் போராட்டங்களையும் முன்னெடுப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது இவ்வடிப்படையில் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்களும் ஒன்றிணைந்து தமது கோரிக்கையை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் கல்வி உயர்கல்வி அமைச்சு ஆகியவற்றிற்கு முன்வைத்தன. பின் பேச்சுவார்த்தைகள் நிகழ்த்தப்பட்டன. அதன் தொடர்ச்சியாகப் பல்வகைப்போரட்டங்கள் நிகழ்த்தப்பெற்றன.

வ.மா.இ.ப.க மாணவர்களும் இம்முயற்சியில் ஆரம்பம் முதலே தெளிவுடையவர்களாக இருந்ததுடன் அப்போராட்டங்களை முன்னெடுப்பதிலும் அதிக அக்கறை உடையவர்களாக இருந்தனர். அதிஷ்டவசமாகப் பல்கலைக்கழகக் கல்லூரியின் ஆரம்பக்காலம் முதல் இறுதிக்காலம் வரையிலும் இங்கு அனுமதிக்கப்பட்ட 3 தொகுதி மாணவர்களில் பெரும்பாலான தமிழ் மாணவர்கள் தமது சமூக நலனில் அக்கறையும் ஆர்வமும் உடையவர்களாக இருந்தனர். அத்துடன், அதற்காக வேண்டி கடுமையாக உழைக்கவும் ஆக்கபூர்வமாக சிந்திக்கவும் கூடியவர்களாக இருந்தனர். இதுதான் இவ்வளாக உருவாக்கத்திற்குப் பெரும் காரணமாயிற்று எனக்கூறின் அது மிகையாகாது. முக்கியமாக 1993 ஆம் ஆண்டு மாக்கந்துறையில் நிகழ்ந்த அனைத்துப் பல்கலைக்கழகக் கல்லூரிகளின் மாணவர் ஒன்றியக் கூட்டத்தின் பின்பு வ.மா.இ.ப.க மாணவர்கள் கீழ்வரும் இருமுடிவுகளை உறுதியாகக் கைக்கொள்வது எனத்தீர்மானித்தனர்.

  1. அனைத்துப் பல்கலைக்கழகக்கல்லூரிகளுடனும் இணைந்து பொதுவான நோக்கான, பல்கலைக்கழகக் கல்லூரிகளை, பல்கலைக்கழக தரத்திற்கு உயர்த்துதல் எனும் அடிப்படையில் போராடுதல்,
  2. வடமாகாண பல்கலைக்கழகத்தைப்பொறுத்தவரையில் சமூக நலனை முதன்மை விடயமாகக் கொள்ளல்.

எனும் அடிப்படை விடயங்கள் குறித்து 1993 ஆம் ஆண்டில் யாழ், பல்கலைக்கழகத்தின் அப் போதைய துணைவேந்தராக இருந்த காலம் சென்ற பேராசிரியர் அ.துரைராஜா, பீடாதிபதிகள் மற்றும் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள் என்பவர்களுடன் கலந்தாலோசிக்கப்பட்டது.

இவ்வடிப்படையில் யாழ். பல்கலைக்கழகத்துடன் நெருக்கமான இணைப்பை ஏற்படுத்துவதில் மாணவர்கள் வெற்றிகண்டனர். இதுவே பிற்காலத்தில் வவுனியா வளாகத்தை யாழ். பல்கலைக்கழகத்தின் கீழ் கொண்டுவர மூலகாரணமாயிற்று, அனைத்துப் பல்கலைக்கழகக் கல்லூரி மாணவர்களின் போராட்டங்கள் காரணமாக பல்கலைக் கழகக் கல்லூரிகளை பல்கலைக்கழகத் தரத்திற்கு உயர்த்த வேண்டிய நிர்ப்பந்த நிலைக்கு அரசு தள்ளப்பட்டது. இந்நிலையில் ‹கிணறு வெட்டப் பூதம் புறப்பட்டது போல புதியதோர் பிரச்சனையை வ.மா.இ.ப.க. எதிர்நோக்கியது, சில சுயநலவாதிகளினால் தமது சுயநோக்கிற்காக வ.மா.இ.ப.க. ஒர்வளாகமாகத்தரமுயர்த்தப்படும் போது யாழ், பல்கலைக்கழகத்தின் கீழ் வரவிடாமல் தடுப்பதற்குக் கடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிறுவனத்தை ரஜரட்டைப்பல்கலைக்கழகத்தின் கீழ் கொண்டுவர வேண்டும் என்பது அவர்களின் கனவாய் இருந்தது. இதன்மூலம் தமது சுயநலநோக்கு அடையப்பெறும் என அவர்கள் பகற்கனவு கண்டனர்.

வ.மா.இ.ப.கல்லூரி யாழ், பல்கலைக்கழகத்தின் கீழ் ஒருவளாகமாகக் கொண்டுவருவதன் அவசியத்தைக் குறித்து யாழ் பல் கலைக்கழகத்தின் அப்போதைய பேராசிரியர் குமரட்ணம் அவர்களுடனும் மற்றும் யாழ், பல்கலைக்கழக சிரேஷ், விரிவுரையாளர்களுட்னும் தொடர்ச்சியான பேச்சு வார்த்தைகள் மாணவர்களால் நடாத்தப்பட்டன. இப்பல்கலைக்கழகக் கல்லூரி ஏன் யாழ், பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்க வேண்டும் என்பதற்கு மாணவர்களால் கீழ்வரும் வலிதான காரணங்கள் வலியுறுத்தப்பட்டன,

  1. ஒரு பிரதேசத்து மக்கள் தமது உயர் கல்வியினை அங்கு உருவாக்கப்படும் உயர் கல்வி நிறுவனங்கள் ஊடாக பெறுவதன் மூலம் அதிகளவு மாணவர்களுக்கு உயர்கல்வி வாய்ப்பு கிட்டுவது சாத்தியமாகும்.
  2. காலவேட்டத்தில் இவ்வுயர் கல்வி நிறுவனமானது பல்கலைக்கழகமாகத் தரமுயர்த்தப்படும் போது அப்பிரதேசத்திலுள்ள பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை அதிகரித்து பல மாணவர்கள் உயர்கல்வி பெற வாய்ப்பளிக்கும்.

இதன் தொடர்ச்சியாக 1996 ஆம் ஆண்டு ஆரம்பகாலப் பகுதியில் யாழ்பல்கலைக்கழகப் பேரவையினால் கீழ்வரும் முடிவுகள் எட்டப்பட்டன, பல்கலைக்கழகத்கல்லூரிகளின் தரமுயர்த்தல்களின் போது வ.மா.இ.ப.க. கல்லூரியினை யாழ், பல்கலைக்கழகத்தின் கீழ்க்கொண்டுவருதல், டிப்ளோமா பட்டத்தைப் பூர்த்தி செய்தவர்களுக்கு யாழ் பல்கலைக்கழகத்தின் கீழ் இளமானிப் பட்டங்களை மேலதிகக் கல்வி ஆண்டுப் படிப்பின் மூலம் வழங்குதல். இவ்வகையில் கணக்கியலும் டிப்ளோமா மாணவூர்களுக்கு அதே தலைப்பின்கீழும், கணித விஞ்ஞானி டிப்ளோமா மாண்வர்களுக்கு அதே தலைப்பின் கீழ் பட் டங்களை வழங்குவதெனவும் அதே போல் ஆங்கிலத்தை ஒரு பாடமாகக் கொண்ட பொதுக் கலைமாணி பட்டம் ஆங்கில டிப்ளோமாதாரிகளுக்கு வழங்குவதெனவும் தீர்மானிக்கப்பட்டது.

இப்பேரவை முடிவுகளின் பிரகாரம் கணக்கியலும் நிதியும் மற்றும் கணித மாணவர்களுக்கான 3ஆம் ஆண்டு கற்கைநெறிகள் 1996ஆம் ஆண்டு மார்ச் மாத இறுதிவாக்கில் தான் ஆரம்பிக்கத் தயாராக இருப்பதாக யாழ் பல்கலைக்கழகம், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்தது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவும், அரசாங்கமும் மாணவர்களின் கோரிக்கைகளுக்கு ஈற்றில் செவிசாய்ந்தது.

இதனடிப்படையில் 26.03.1997ஆம் ஆண்டு வர்த்தமானி அறிவித்தல் மூலம் இந்நிறுவனமானது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம் எனப் பெயரிடப்பட்டு ஓர் வளாகமாகத் தரமுயர்த்தப்பட்டு இன்று துரித வளர்ச்சிபெற்று வருகின்றது. இவ்வாறு தரமுயர்த்தப்பட்ட வளாகத்தில் இன்று பிரயோக விஞ்ஞானபீடம், வியாபார கற்கைநெறிகள் பீடம் என இரண்டு பீடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பிரயோக விஞ்ஞான பீடத்தின் கீழ் பௌதீக விஞ்ஞானம், உயிரியல் விஞ்ஞானம் என இரு துறைகளும் வியாபார கற்கைநெறி பீடத்தின் கீழ் கணக்கியலும் நிதியியலும், பொருளியல் முகாமைத்துவம் என இரு துறைகளும் ஆங்கில நெறிக்கென ஆங்கில மொழி கற்கைகள் பிரிவும் உருவாக்கப்பட்டு சிறப்பாக இயங்கி வருகின்றன.

வவுனியா வளாகத்துக்கான முதலாவது பட்டமளிப்பு விழா 08.05.2000 அன்று வவுனியாவில் அப்போதைய வளாக முதல்வர் பேராசிரியர் நா.பாலகிருஷ்ணன் தலைமையில் இரண்டு பகுதியாக இடம் பெற்றது. இந்த வரலாற்று நிகழ்வில் சுமார் 450 மாணவர்கள் கலந்து கொண்டு பட்டம் பெற்றுக் கொண்டனர். 1991 ஆம் ஆண்டு அனுமதி பெற்று கல்வி கற்க வந்த மாணவர்கள் சுமார் 9 வருடங்களின் பின்னர் தங்களுக்கான பட்டத்தினை பெற்று வெளியேற வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்ட்து. அந்தளவுக்கு அவர்களது போராடி தமக்கான அங்கீரத்தினை பெற்றுக் கொண்டார். அவர்கள் கல்வி கற்க வகுப்பில் இருந்த காலத்தைக் காட்டிலும் போராட்டங்களுக்காக வகுப்புகளை புறக்கணித்து வீதியில் நிண்றதுவே அதிகமாக காணப்பட்டது.

வெறுமனவே ஏட்டுப்படிப்புடன் இப்பட்டங்களைப் பெறவில்லை. மாறாக, தமிழ்ப் பிரதேசத்திற்கான குறிப்பாக வன்னிப் பிரதேசத்தின் வருங்கால பல்கலைக்கழகமாக மலரப்போகும் இன்றைய வளாக உருவாக்கத்திற்காக வேண்டி கடும் உழைப்பைச் சிந்தியதன் விளைவாக இப்பட்டங்களைப் பெற்றுக் கொள்கின்றனர் எனக் கூறின் அது மிகையாகாது, மேலும் வ.மா.இ.ப.க.யாக இருந்த காலத்திலிருந்தே மாணவர்களின் ஊக்கமிகு முயற்சிகளினால் பிட மற்றும் பொது மாணவர் சங்கம் தவிர்ந்த பல்வேறு துறைசார்ந்த சங்கங்கள் உருவாக்கப்பட்டு சிறப்பான பணியினை ஆற்றி வருகின்றன.

முக்கியமாக கலை, கலாசாரமன்றத்தினர் பல்கலைக்கழக வளாகத்திலும் சமூக மட்டத்திலும் கலை, கலாசார பணிகளை குறிப்பிடத்தக்க அளவு ஆற்றியுள்ளார்கள். நாடகப் பயிற்சிப்பட்டறை இலக்கிய கருத்தரங்கு, கவியரங்கு, விவாத மேடை, நாடக மேடையேற்றம் இவற்றோடு கவிதா நிகழ்வு, கதா நிகழ்வு, ‹உறவுகள்›எனும் வீடியோ படத்தயாரிப்பு «தடம்› சஞ்சிகை வெளியீடு, ‹வன்னி ஓடை’, ‹வன்னி அருவி›, ‹வன்னி ஊற்று› இசை நாடா வெளியீடு என பல்தரப்பட்ட கலை இலக்கிய நிகழ்ச்சிகளை மேற்கொண்டுள்ளார்கள். அதே போன்று கணக்கியலும் நிதியியலும் துறைசார் மாண்வர்மன்றம் எனும் துறைசார் சஞ்சிகையின் மூன்றுமலர்களையும் ஆங்கிலமன்றம் எனும் மூன்று மலர்களையும் ஆங்கில விரிவுரையாளர்கள் Shuttle எனும் சஞ்சிகையினையும் வெயிட்டுள்ளார்கள், இந்தப்பின்னணியில் இங்கு கலை, மனிதப் பண்பாடு மற்றும் சமூக விஞ்ஞானபீடம் ஒன்றை நிறுவ வேண்டிய தேவை சமூக மட்டத்திலும் வளாகத்தினுள்ளும் உணரப்பட்டுள்ளது. இந்த வகையில் ஒப்பீட்டு சமயக் கல்வி, சமூக விஞ்ஞானக்கல்வி, உளவியற் கல்வி மற்றும் நாட்டாரியல், மொழிகற்கைகள் இங்கு ஆரம்பிக்கப்படவேண்டியது மிகவும் அத்தியாவசியமானதாகும். இதன் மூலமே பல்கலைக்கழக வளாகம் அமைந்துள்ள சமூகம் பற்றிய ஆய்வுகள் மேலோங்க வழிபிறக்கும், சமூகம் சாராத மேற்குமயப்பட்ட கற்கை நெறிகளை நடாத்துவதுடன் மட்டும் அச்சமூகத்துடன் பல்கலைக்கழத்தில் பிணைப்பிற்கு சாத்தியமாகாது அந்நியப்பட்ட ஒரு பல்கலைக்கழக வளாகமாகவே அது அமையும்.

எனவே யாழ் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம் ஒரு தேசிய பல்கலைக்கழகமாக வன்னிப் பிராந்தியத்தில் வளர்த்தெடுக்குப்பட்டு மானுடப்பண்பாட்டு மற்றும் சமூக விஞ்ஞானபீடமொன்று விரைவில் ஆரம்பிக்கப்படவேண்டுமென்பது பல அறிஞர்களால் சுட்டிக்காட்டப்பட்டுவருகின்றது.

எனவே இதன் அத்தியாவசியத்தை உணர்ந்து அதன் உருவாக்கத்திற்காக யாழ் பல்கலைக்கழக பேரவையினரும் கல்வியியலாளர்களும் வன்னி வாழ் பொதுமக்களும் உழைக்க வேண்டுமென்பது காலத்தின் தேவையாகும்.