ஜூலை 1983 மேலும் ஒரு சம்பம்

இறந்தவர்களைப் புதைப்பது ஒரு கலையாகவே வளர்ந்திருந்த எமது காலத்தில் இந்த நிகழ்வு மட்டும் அழிய மறுத்து எஞ்சியிருப்பதற்குக் காரணம் ஏதுமில்லை சத்தியமாகச் சொல்கிறேன்: நான் உணர்ச்சிபூர்வமானவன் அல்லன் சித்தம் குழம்பியவனாகவும் ஒருபோதும் இருந்ததில்லை உங்களைப் போலவே...

நந்திக்கடல்

நந்திக்கடல் எல்லாத் திசைகளிலும் காலாட்படை முன்னேறுகிறபோது அங்குலம் அங்குலமாக நிலம் மறைந்து நிலக் காட்சி கருகியது மௌனத் திரைப்படத்தில் ஓலம் எழுப்புகிறது மக்கள் பெருந்திரள் செல்லும் இடம் எங்கே? கடல்மடியும் கடற்கரையும் துணை நிற்கும் எனச் சென்றோரின் கன்முன்னே குறுகித் தெறித்து மறைந்தது கடல் ---------- தொலைபேசி அழைப்பு வெள்ளைக்கொடி கைகளில் ஏந்தி விட்டோம் அழைப்போம் காத்திருங்கள் என்று சொன்னவரின் அழைப்பைக்...

பறக்கடவுள்

சொல்லுகிறீர்கள் முதுகு விரியக் காய்ந்தால் அதன்பெயர் பறவெயில் உலரும் புழுத்த தானியத்தை அலகு கொத்தி விரையும் அது பறக்காகம் கையிலிருப்பதை மணிக்கட்டோடு பறித்துச் சென்றால் அது பறநாய் நிலத்தை உழுது வியர்வை விதைத்தால் அது பறப்பாடு சகலத்திற்கும் இப்படியே பெயர் என்றால் இரத்த வெறியில் திளைக்கும் எது அந்த பறக்கடவுள். -இரவு மிருகம் (காலச்சுவடு பதிப்பகம் தொகுப்பிலிருந்து.) கவிஞர் சுகிர்தராணி

வானொலி மான்மிய குறும்பா !

சிரிப்புக்கும் சிந்தனைக்கும் கருத்துக்கும் கற்பனைக்கும்" என்ற கட்டியத்துடன் மகாகவியின் குறும்பா எனும் கவித்தொகை அறுபதுகளின் பிற்பகுதியில் வெளிவந்தபோது  கருத்துப் புரட்சி, வடிவப் புரட்சி, சிரிப்புப் புரட்சி  எனப் பல தளங்களில் பெயர் பெற்றது....